Tuesday, May 10, 2016

Moong dal halwa

பாசிப்பருப்பு அல்வா 

 

தேவை :

  • பாசிப் பருப்பு - 1 கப் 
  • சர்க்கரை - 1 கப் 
  • நெய் - 1/2 கப் 
  • வறுத்த முந்திரி, திராட்சை - தேவைக்கு 
  • கோதுமை மாவு - 1 tablespoon 
  • ஏலத்தூள் - 1 teaspoon 

செய்முறை :

  1. பாசிப் பருப்பை லேசாக வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு தேவையான தண்ணீர் விட்டு குக்கரில் 3-4 விசில் வரும் வரை வேக விடவும்.
  2. பிறகு குக்கரைத் திறந்து பருப்பை மத்தால் மசிக்கவும்.சிறிது சிறிதாக  சர்க்கரை சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு கை விடாமல் கிளறவும்.
  3. கோதுமை மாவை வாசனை வரும் வரை வறுத்து பாசிப் பருப்புடன் சேர்க்கவும். சிறிது சிறிதாக நெய்யையும் சேர்க்கவும்.
  4. பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கவும். இறக்குவதற்கு முன்  வறுத்த முந்திரி, திராட்சை, ஏலத்தூள் சேர்க்கவும்.
 
 
 
 
 
 
 

Tip #46 : பட்சணங்கள் சிவக்காமல் இருக்க !!!

மிஷினில் மாவு அரைத்தவுடன் சூடு ஆறும் வரை வைத்திருந்து பிறகு மூடி வைக்கவும். சூட்டோடு மூடி வைத்த மாவில் பட்சணங்கள் செய்தால் சிவந்து விடும்.
 
 

Wheat flour pakoda

கோதுமை மாவு பகோடா

பகோடா அனைவருக்கும் பிடித்தமான ஸ்நாக்ஸ். கடலை மாவில் பகோடா செய்யும் போது வாயுக் கோளாறுகள் ஏற்படும். ஒரு சிலருக்கு  கடலை மாவினால் அலர்ஜி ஏற்படுவதுண்டு. என் தோழியின் அம்மா கோதுமை மாவில் பகோடா செய்து கொடுத்தார்கள். மிகவும் ருசியாக இருந்தது. அதை அனைவரிடமும் பகிர ஆசைப் படுகின்றேன். ( கோதுமை மாவிற்குப் பதிலாக மைதா மாவு உபயோகிக்கலாம். )
 
 

தேவை : 

  • கோதுமை மாவு - 1 கப் 
  • சமையல் சோடா - 1 சிட்டிகை 
  • பச்சை மிளகாய் - தேவைக்கு 
  • சீரகம் - 1 teaspoon 
  • பெருங்காயம் - சிறிது 
  • சிறிதாக நறுக்கிய வெங்காயம் - 2 (பெரிய வெங்காயம் )
  • தேங்காய் பல் சிறிதாக நறுக்கியது - 2-3 teaspoon (விருப்பப்பட்டால் அதிகமாக சேர்க்கலாம் )
  • உப்பு - தேவைக்கு 
  • எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு 
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி நறுக்கியது - சிறிது 

செய்முறை :

  1. கோதுமை மாவை நன்றாக சலித்துக் கொள்ளவும். மாவுடன் எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களையும் கலக்கவும்.
  2. பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்கவும்.பகோடா போடும் பதம் வந்ததும் தண்ணீர் சேர்ப்பதை நிறுத்தவும்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறிது சிறிதாக கிள்ளிப் போடவும். சிவந்து வந்ததும் எடுத்து விடவும்.
  4. சுவையான, ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்  ரெடி. தக்காளி சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
 
 
 
 
 

 

Tip #45 : பாத்திரங்கள் வாடை இல்லாமல் இருக்க !!!

அசைவம் அல்லது பூண்டு அதிகம் சேர்த்து சமைக்கும் போது பாத்திரங்கள் கழுவிய பிறகும் வாடை இருக்கும். பாத்திரங்களை கழுவிய பிறகு எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரால் கழுவினால் வாடை இல்லாமல் இருக்கும்.

 
 

Monday, May 9, 2016

Jackfruit ice cream

கோடைகாலம் ஆரம்பித்து விட்டது. குழந்தைகளுக்கு விடுமுறையும் விட்டாச்சு. குழந்தைகளுக்கு தினம் ஆரோக்கியமான உணவுகள் செய்து கொடுப்பதில் அம்மாக்கள் பிஸியாக இருப்பார்கள். கோடைகாலம் என்றாலே நமக்கு நினைவில் வருவது ஐஸ்கிரீம். ஐஸ்கிரீமை  நாமே நம் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். எளிதாகக் கிடைக்கும் பொருட்களை வைத்து என் தோழி எனக்கு கற்றுக் கொடுத்தது இதோ உங்களுக்காக .

 

பலாப்பழ ஐஸ்கிரீம் 

 

தேவை :

  • பலாச்சுளை - 6
  • சர்க்கரை - 1 கப் 
  • பால் - 1 கப் 
  • பால் பவுடர் - 1 கப் 
  • வெணிலா எசன்ஸ் - 1 spoon 
  • முந்திரி - 5
  • ஏலத்தூள் - 1/4 spoon 

செய்முறை :

  1. பால் பவுடரில் பால் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். பலாச்சுளையை பால் விட்டு அரைக்கவும்.
  2. பாலில் சர்க்கரை போட்டுக் காய்ச்சிக் குறுக்கவும். எல்லாவற்றையும் கலந்து எசன்ஸ் கலந்து மிக்ஸியில் அடித்து ஒரு பௌலில் போட்டு ப்ரீசரில் வைக்கவும்.பாலுக்கு பதிலாக கோவா செய்தும் கலக்கலாம்.
  3. 2 மணி நேரம் கழித்து வெளியில் எடுத்து மறுபடி மிக்ஸியில் அடித்து மிருதுவாக்கவும். பிறகு ப்ரீசரில் வைக்கவும்.
  4. இது போல் 2 முறை செய்தால் ஐஸ்கிரீம் மிக மிருதுவாக இருக்கும். கஸ்டர்ட் பவுடர் கரைத்து கொதிக்கவிட்டோ, கோவா சேர்த்தோ செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
  5. அலங்கரிக்க நெய் விடாது வருத்த முந்திரி, ஏலம் சேர்க்கவும். சுவையான சத்தான ஐஸ்கிரீம் ரெடி.
 
 
 
 
 
 
 
 

Tip #44: இட்லி மிருதுவாக இருக்க !!!

இட்லிக்கு அரைக்கும் போது உளுந்தில் ஐஸ் வாட்டர் ஊற்றி அரைத்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.

 
 

Saturday, May 7, 2016

Bread bajji

பிரெட் பஜ்ஜி 

 
 

தேவை :

  • பச்சைப் பட்டாணி - 1/4 கப் 
  • மீல் மேக்கர் - 10
  • உருளைக் கிழங்கு - 2
  • பிரெட் துண்டுகள் - 3
  • கடலை மாவு - 1 கப் 
  • பெரிய வெங்காயம் - 1
  • பச்சை மிளகாய் - 2
  • மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன் 
  • மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன் 
  • சமையல் சோடா - 1சிட்டிகை 
  • மல்லித்தழை - பொடியாக நறுக்கியது தேவைக்கு 
  • எண்ணெய், உப்பு - தேவைக்கு 
  • எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன் 
  • சீரகம் - 1 டீஸ்பூன் 

செய்முறை :

  1. மீல் மேக்கரை கொதி நீரில் 5 நிமிடம் போட்டு வைத்திருந்து, பிறகு நீரை வடித்து குளிர்ந்த நீரில் அலசவும்.
  2. நீரை ஓட்டப் பிழிந்து மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக உதிர்த்துக் கொள்ளவும்.
  3. உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணியை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
  4. வாணலியில்  எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு, சேர்த்து வதக்கவும்.
  5. இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, பட்டாணி, மல்லித்தழை, உதிர்த்த மீல் மேக்கர் போட்டு கிளறி இறக்கவும்.
  6. கடலை மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா, சிறிது மிளகாய்த் தூள், தேவைக்கு உப்பு, சீரகம் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.
  7. ஒரு பிரெட் துண்டை எடுத்து அதன் மேல் இக் கலவையை வைத்து இரண்டாக மடித்துக் கொள்ளவும்.
  8. சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.தக்காளி சாஸுடன் பரிமாற சுவை அள்ளும்.
 
 
 
 
 
 

 

Tip #43 : வாழைப்பூ ஆயும்போது பிசுக்கு ஓட்டுவதைத் தவிர்க்க !!!

கையில் உப்பைத் தடவிக் கொண்டு ஆய்ந்தால் பிசுக்கு ஒட்டாது.

 

Friday, May 6, 2016

Veg gravy

வெஜ் கிரேவி 

 

தேவை :

  • பீன்ஸ் - 50 gm 
  • காரட் - 50 gm 
  • பட்டாணி - 50 gm 
  • காலிபிளவர் - 50 gm 
  • குடை மிளகாய் - 50 gm 
  • உருளை - 2
  • வெங்காயம் - 1/4 kilo ( உரித்தது )
  • தக்காளி - 1/4 kilo (நறுக்கியது )
  • மிளகாய்த் தூள், தனியாத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் - தலா 1 teaspoon 
  • இஞ்சி, பூண்டு விழுது - 1 teaspoon 
  • கரம் மசாலா - சிறிது
  • வெண்ணெய், எண்ணெய் - சிறிது
  • முந்திரி பருப்பு விழுது - தேவைக்கு 
  • உப்பு - தேவைக்கு 

செய்முறை :

  1. காய்களை சிறியதாக நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும். எண்ணெயை வாணலியில் ஊற்றி காய்ந்ததும் கரம் மசாலா சேர்த்து தாளிக்கவும்.
  2. பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்.
  3. மஞ்சள் தூள், தனியா, சீரகத்தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு முந்திரி விழுது சேர்க்கவும்.
  4. இப்பொழுது வெந்த காய்களைச் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு வெண்ணெய் சேர்க்கவும்.
  5. இந்த கிரேவி சப்பாத்தி, பூரி போன்றவற்றிற்கு மிக நன்றாக இருக்கும்.
 
 
 
 

 

 

Tip #42 : மருதாணி நன்றாகச் சிவக்க !!!

கைகளில் மருதாணி வைத்துக் கொள்வதற்கு முன் எலுமிச்சம் பழச் சாற்றை தடவிக் கொண்டு மருதாணியை வைத்துக் கொண்டால் மிக நன்றாகச் சிவக்கும்.

 
 

Aloo bonda

ஆலூ போண்டா 

 
 

தேவை :

  • ஆலூ - 2
  • மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி 
  • எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி 
  • கரம் மசாலா பொடி - 1 தேக்கரண்டி 
  • உப்பு - தேவைக்கு 
  • சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன் 
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிது 
  • எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு 

பூரணம் செய்ய :

  • கிரீன் பட்டாணி - 1 டேபிள்ஸ்பூன் ( வேக வைத்தது )
  • பனீர் - 2 டேபிள்ஸ்பூன் 
  • சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி 
  • மிளகுப் பொடி - 1/2 தேக்கரண்டி 
  • உப்பு - தேவைக்கு 

செய்முறை :

  1. உருளைக் கிழங்கை வேக வைத்து மசிக்கவும். இத்துடன் எல்லா மசாலாவையையும் சேர்க்கவும். இது தான் மேல் மாவு.
  2. பனீருடன் பூரணப்  பொருள்களைச் சேர்த்துப் பிசையவும். மேல் மாவை சிறு உருண்டையாக செய்து உள்ளே பூரணத்தை வைத்து மூடி உருட்டி சூடான எண்ணெயில்  பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
  3. ருசியான போண்டா ரெடி. தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
 
 
 
 
 
 

 

Tip #41: முகப் பரு குறைய !!!

ஜாதிப்பத்திரியை பாலில் குழைத்து, முகப் பரு மீது தடவி வந்தால் பருக்கள் காய்ந்து உதிர்ந்து விடும். வாரம் 3 முறை செய்ய நல்ல பலனிருக்கும்.
 
 
 

Tuesday, May 3, 2016

Benefits of hot water

இதமளிக்கும் வெந்நீர் !

 
 
 
 
  • சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத் தொல்லையே இருக்காது.
  • அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.
  • வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.
  • வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.
  • நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகும்.
  • மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.
  • கால் பொறுக்கும், அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு,  அதில் கல் உப்பையும் போட்டுக் கலந்து கால் பாதங்களை 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.
  • பித்த வெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிக் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.
  • தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால் உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.
  • சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு, ஒரு தம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.